பணகுடி திரு இருதய பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா காெண்டாட்டம்
பணகுடி திரு இருதய மழலையர், தொடக்கப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.;
பணகுடி திரு இருதய மழலையர், தொடக்கப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பணகுடி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை இருதயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் நாடகம், நடனம், கவிதை, பல மொழிகள் சார்ந்த சொற்பொழிவு என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
விழாவிற்கு தாளாளர் அருட்சகோதரர் ஜேசு அருளானந்தம் தலைமை வகித்தார். திரு இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் அந்தோணி சாமி மற்றும் அருட்சகோதரர் ஜோசப் அருள்ராஜ் வாழ்த்துரை வழங்கினர். விழாவின்போது பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ஸ்ரீதர் விஸ்வநாதன் ஆசிரியர், நியாஸ் மற்றும் சமூக ஆர்வலர் லியோவின்ஸ் கலந்து கொண்டனர்.