சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா
சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விண்மீன் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.;
கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விண்மீன் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா குடும்பத்தினர் சூரிய நாராயணமூர்த்தி, தாசில்தார் ஓய்வு பழனி செல்வம், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,முதல்வர் சங்கர சுப்பிரமணியன், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளைநிறுவனர் திருமலை கார்த்திகேயன், சமூகசேவகர், R. சதீஷ், வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.