சங்கரன் கோவிலில் ஆடித்தபசு முன்னிட்டு தேரோட்டம்

சங்கரன்கோவில் சங்கரனார் கோமதி அம்மாள் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-07-20 02:39 GMT

சங்கரன்கோவில் தேரோட்டத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு தேரோட்டம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த தபசுத் திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தபசு திருவிழாவின் 9ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்பட்டு, திருத்தேர்களில் எழுந்தருளினர்

மேலும் இந்த தேரோட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைதுறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீ குமார், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் , தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

Similar News