சங்கரன்கோவில் அருகே சிசிடிவி கேமரா செயலிழப்பு: இரு பிரிவினர் மோதலால் போலீசார் குவிப்பு
சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம்.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களித்தவர்கள் வெளியே செல்லாமல் அங்கேயே இருந்ததாலும் மக்கள் கூட்டம் காரணமாகவும் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
கண்காணிப்பு கேமரா செயல்படாததற்கு ஒரு பிரிவினரே காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நிலைமையை வாக்குச்சாவடி அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த 100-ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்களித்த பின்பும் அங்கேயே சுற்றி திரிந்தவர்களை வெளியில் அனுப்பியும், மோதலுக்கு காரணமான இரண்டு பிரிவினரையும் உடனடியாக வாக்களிக்க செய்து வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியே அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.