சங்கரன்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு: சிசிடிவி காட்சிகளை காெண்டு விசாரணை

சங்கரன்கோவிலில் இரண்டு கார்களில் கண்ணாடியை உடைத்து நள்ளிரவில் பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2021-10-23 13:15 GMT

சங்கரன்கோவிலில் இரண்டு கார்களில் கண்ணாடியை உடைத்து நள்ளிரவில் உள்ளே இருக்கும் பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5ம் தெருவை சேர்ந்த வேல்ராஜன், முத்துராமகிருஷ்ணன் ஆகியேரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை நோட்டமிட்டு வந்த கொள்ளையன் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் இரண்டு காரின் கண்ணாடியை உடைத்து காரை திருட முயற்சித்துள்ளான். கார் இயங்காததால் காரில் உள்ள ரேடியோ செட் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்லும் காட்சியானது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகியுள்ளது.

காரின் கண்ணாடியை உடைத்து அதன் உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற சம்பவம் குறித்து வேல்ராஜன், முத்துராம கிருஷ்ணன் ஆகியோர் சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது சிசிடிவி காட்சியை கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News