சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் தம்பி பலி- அண்ணன் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே நடந்த வாகன விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.;

Update: 2022-02-20 13:09 GMT

சங்கரன் கோவில் அரசு மருத்துவமனை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகநேரி கிராமத்தைச் சேர்ந்த வெள்ள பாண்டி மகன்கள் மாடசாமி மற்றும் மகாராஜன். இவர்கள் இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை இருவரும் கேரளாவில் இருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து வந்துகொண்டிருந்தபோது சொந்த ஊரான அழக நேரி கிராமத்தை நெருங்கி வந்த வேளையில் எதிரே வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே மகாராஜன் பலியானார்.

அண்ணன் மாடசாமி படுகாயத்துடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து  குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மகாராஜன் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்..

Tags:    

Similar News