அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
கொரோன தொற்று குறைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கலாம் என்று, கடந்த 21ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்
இந்நிலையில், நேற்று வனத்துறை சார்பில் தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில், வரும் 31.12.2021 முதல், 02.01.2022 வரை, மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.
மேலும், மணிமுத்தாறு அருவியில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.