சங்கரன் கோவில் அருகே அநாதையாக வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

சங்கரன் கோவில் அருகே அநாதையாக வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு செவிலியர் பராமரித்து வருகிறார்.

Update: 2023-06-08 11:45 GMT

பேருந்து நிறுத்தத்தில் விட்டு சென்ற பெண் குழந்தையை செவிலியர் பராமரிப்பு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிறந்து இரண்டு இரண்டே நாட்கள் ஆன பெண் குழந்தையை பேருந்து காத்திருப்பு நிழல் குடையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள பேருந்து காத்திருப்பு நிழல் குடையில் பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இருந்த பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஒருவர் சாக்கு பையில் வீசி சென்ற குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பெயரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மர்ம நபர்கள் வீசிச் சென்ற பெண் குழந்தையை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிறந்து இரண்டே நாட்கள் ஆன நிலையில் தொப்புள் கொடி கூட அகற்றாத நிலையில் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கி தவிக்கும் நிலை தான் தற்போது பெரும்பாலான சூழல் தான் இளம் பெண்களிடம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிறந்த பச்சிளம்குழந்தையை அதனை பெற்றெடுத்த பெண் எதற்காக? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றார் என தெரியவில்லை.

Tags:    

Similar News