கார்த்திகை திருவிழா நடத்த வலியுறுத்தி ஐயப்ப சேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் கார்த்திகை திருவிழாவை நடத்த கோரி ஐயப்ப சேவா சங்கத்தின் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-19 03:09 GMT

சங்கரன்கோவிலில் கார்த்திகை திருவிழாவை நடத்த கோரி ஐயப்ப சேவா சங்கத்தின் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சங்கரன் கோவிலில் கார்த்திகை திருவிழாவை நடத்த கோரி ஐயப்ப சேவா சங்கத்தின் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் திருவிழா நடத்த இந்து அறநிலைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்திருந்தது. சங்கரன்கோவிலில் தீபத் திருவிழா நடத்த ஐயப்ப சேவா சங்கத்தினர். மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று சங்கரன் கோயில் தீபதிருவிழா நடத்த கோரி தேரடி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர். அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News