சங்கரன்கோவிலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி செய்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.;

Update: 2022-02-16 12:30 GMT

அஜீஸ்.

சங்கரன்கோவிலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி செய்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் செல்லும் சாலையில் பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது இங்கு இன்று அதிகாலை ஏடிஎம்இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடந்துள்ளது. அப்போது மும்பை தலைமை அலுவலகத்தில் அபாய ஒலி அடித்துள்ளது.

உடனே மும்பையில் இருந்து சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தன்பேரில் சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சங்கரன்கோவில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த பீர்மைதீன் மகன் அஜீஸ் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News