சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் திருவாதிரை திருவிழாவானது கடந்த 10 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் நாள்தோறும் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
நேற்று திருவாதிரை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று திருவாதிரைத் திருநாளி சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் கோ பூஜையுடன் சிறப்பு அலங்காரம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படும் நடனம் புரியும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் நடராஜர் அம்பாளுடன் தனிச் சப்பரத்தில் நடன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.