பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்: வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்திவைப்பு

சங்கரன்கோவில் அருகே, பூத் ஏஜெண்டுகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், வாக்குப்பதிவு சிறிது நேரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.;

Update: 2021-10-06 09:00 GMT

மேல நரிக்குடி கிராமத்தில், வாக்குப்பதிவு மையத்தில் அதிக கூட்டம் கூடியதால், முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில்,  சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல நரிக்குடி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு இடத்தில் வாக்குகளை செலுத்துவதற்கு வாக்காளர்கள் அதிகளவில் கூட்டம் கூடினர். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றனர். இதற்கு முகவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குச்சாவடி முகவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து , வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது. மேலநரிக்குடி வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Tags:    

Similar News