சங்கரன்கோவில்: மாற்றுதிறனாளியின் விருப்பத்தை நிறைவேற்றிய பாஜக அண்ணாமலை

பாஜக வேட்பாளர் மாற்றுதிறனாளியின் விருப்பத்தை ஏற்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று கொடியேற்றிய பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை.;

Update: 2021-09-29 16:15 GMT

சங்கரன்காேவிலில் பாஜக வேட்பாளர் மாற்றுதிறனாளியின் விருப்பத்தை ஏற்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று கொடியேற்றிய பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை.

சங்கரன்கோவில் அருகே பாஜக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மாற்றுதிறனாளியின் விருப்பத்தை ஏற்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று கொடியேற்றிய மாநிலத்தவைர் அண்ணாமலை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுபவர் மாற்றுதிறனாளியான பாக்கியராஜ். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகியபுரம், ஆணைகுளம் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் அப்போது மாற்றுதிறனாளியான பாக்கியராஜ் என்னுடைய கிராமத்திற்கு வந்து கொடியேற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டார். உடனடியாக சென்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னூத்து கிராமத்திற்கு சென்று கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்வானது அப்பகுதிகளில் உள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News