சங்கரன்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிமுகம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்றது.;
தென்காசி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின அறிமுகக்கூட்டம், மாவட்ட செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் தலைமையில் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் கோட்டைதுரை, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் முப்பிடாதி, நகர இணை செயலாளர் கனகசபாபதி, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் அரிச்சந்திரன், முன்னாள் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் பூசைத்துரை, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய அவை தலைவர் அய்யாத்துரை, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பசும்பொன் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.