நகர் மன்ற துணைத் தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக: சங்கரன்கோவிலில் சலசலப்பு

சங்கரன்கோவில் நகராட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-05 13:45 GMT

சங்கரன்கோவில் நகர் மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜு வெற்றி சான்றிதழை பெற்று காெண்டார்.

சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவியை திமுக பெற்றிருந்த நிலையில் துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் உமாமகேஸ்வரியும், அதிமுக சார்பில் முத்துலட்சுமியும் போட்டியிட்டனர்.இருவரும் தலா 15 வாக்குகள் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பிற்பகலில் நகராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.அதிமுகவைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் 2.30 மணிக்கு முன்பாகவே நகராட்சிக்கு வந்தனர். திமுக உறுப்பினர்கள் 3 மணிக்கு பிறகு வந்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரியா தலைமையில் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் திமுக உறுப்பினர் புனிதா இதில் பங்கேற்கவில்லை. இதனால் 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.சரவணகுமார் 13 வாக்குகளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜு 16 வாக்குகளும் பெற்று துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நகராட்சிக்கு வெளியே காத்திருந்த திமுக அதிமுக தொண்டர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News