சங்கரன்கோவிலில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொகுதியில் பாேட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.;
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் ஒன்றியம் 9வது வார்டு ஒன்றியக் கவுன்சிலருக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கருப்பசாமி அவர்களின் மருமகள் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் திலீபன் ஆகியாேருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் அய்யோ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.