வாசுதேவநல்லூரில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்
வாசுதேவநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரித்தனர்.;
ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான மனோகரன் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் செயலாளர் சீமான் மணிகண்டன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் USA. வெங்கடேசன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..