சங்கரன்கோவில் அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் மாரியப்பன் என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பணம் விநியோகம் செய்த மாரியப்பனிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.