ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்: சபாநாயகர் வழங்கல்
ராதாபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை சபாநாயகர் வழங்கினார்.
ராதாபுரத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அகத்தியர் கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப் பேரவைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ராதாபுரம் திசையன்விளை தாலுகாக்களில் ஏராளமான குளங்களுக்கு நீர் கிடைக்க வழிவகை செய்த தமிழக சட்டப் பேரவைத் தலைவருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவில் வேளாண் வணிகம் பொறியியல் விற்பனை பிரிவு சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள், இடு பொருட்கள் பங்குசான்றிதழ்களை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் வழங்கினார். முன்னதாக வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விவசாய பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சபாநாயகர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வீ.எஸ்.ஆர்.ஜெகதீஸ் திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் வேளாண்மை வணிக துணை இயக்குநர் முருகானந்தம் ராதாபுரம் தோட்டக்கலை அலுவலர் இசக்கி முத்து துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் மாவட்ட யூனியன் கவுன்சிலர் பாஸ்கர் ஒன்றிய கவுன்சிலர் ஜான்ஸ்ரூபா ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஊராட்சி தலைவர்கள் உதயத்தூர் கந்தசாமி மணிகண்டன், ராதாபுரம் பொன் மீனாட்சி சவுந்திரபாண்டியபுரம் முருகேசன் மற்றும் முடவன்குளம் சுப்பையா உள்ளிட்ட விவசாயிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.