சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை

தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Update: 2021-09-28 17:00 GMT

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள பஞ்சாயத்துதலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் அனைவரும் எவ்வாறு பின்பற்ற வேண்டும், தேர்தல் நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு நடத்தை விதிமுறைகளை பற்றி வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் வேட்பாளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்கள், கேள்விகளுக்கு தீர்வு அளிக்க எந்த நேரமும் தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு  கொள்ளலாம் எனவும் கூறினார்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியில் ஆயிரக்கணக்கான வேட்பாள்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் ஆலோசனை கூட்டம் என அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து போதிய இடம் வசதி இல்லாமல் பெரும்பாலான வேட்பாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு மேஜையில் அமர்ந்திருந்தது. மீண்டும் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது..

Tags:    

Similar News