சங்கரன்கோவிலில் விறுவிறுப்பாக நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தல்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், அதிமுக உட்கட்சி தேர்தல். விறுவிறுப்பாக நடைபெற்றது.;
சங்கரன்கோவிலில், வார்டு அதிமுக செயலாளர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர் பதவிக்காக மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கிய கட்சியினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஒன்றிய பகுதிகளில், அதிமுக கட்சியின் உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. குருவிகுளம், மேலநீலிதநல்லூர்,சங்கரன்கோவில் ஆகிய ஒன்றிய பகுதிகளுக்கு அந்தந்த பகுதிகளில் நகர மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஏற்பாட்டில் தேர்தல் நடத்தும் மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த தேர்தல் நடத்தும் மையங்களில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று, விறுவிறுப்பாக நகர வார்டு கழக செயலாளர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் பதவிக்காக மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.