2 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை : 2 லட்சம் இழப்பீட்டுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை 2 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு..

Update: 2022-01-08 08:00 GMT

தேசிய மனித உரிமைகள் ஆணையம். (மாதிரி படம்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜை கைது செய்து, பொய்வழக்கு பதிவு செய்து, காவல் நிலையத்தில் சித்ரவதை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர்  கே.ஜி.பாஸ்கரன் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, அசோக்ராஜிற்கு ரூ.இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சங்கரன்கோவில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜேக்டோ,ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஆதரவாக மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த உறவினர்களையும், சங்க நிர்வாகிகளையும் பலவந்தமாக காவல்துறை அப்புறப்படுத்தியதை தடுத்த காரணத்திற்காக இன்ஸ்பெக்டர் பாலாஜி, அசோக்ராஜை கைது செய்து அவரை சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் அடித்து விடிய விடிய சித்ரவதை செய்தார். இதற்கு  சங்கரன்கோவிலில் கண்டன போராட்டம் நடைபெற்றது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக்ராஜை சந்தித்து பேசினர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. காவல்துறை சித்ரவதையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று மனித உரிமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News