மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து: கணவன் உயிரிழப்பு

மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து ஏற்பட்டதில் கணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-08-17 07:31 GMT

விபத்தில் உயிரிழந்த தங்கராஜ்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் கீழ காலனி தெருவில் வசித்து வருகின்றனர். இன்று மாலையில் மனைவி உதய குமாரிக்கு இருசக்கர வாகனம் கற்றுக் கொடுப்பதற்காக அருகில் உள்ள சாலையில் இருவரும் சென்றுள்ளனர்.

அப்பொழுது உட்கார்ந்து இருந்த கணவன் தங்கராஜ் மனைவிக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்துள்ளார். அப்பொழுது நிலை தடுமாறி ஆக்சிலேட்டரை திருக்கியதால்  வேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலை அருகில் இருக்கும் ஆழமான ஓடையில் விழுந்தது.

ஓடை ஆழமாக இருந்ததால் பின் இருக்கையில் இருந்த கணவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர்களைஉடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் தங்கராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குருவிகளும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் பழகும் போது ஏற்பட்ட விபத்தில் மனைவியின் கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News