சங்கரன்கோவில் அருகே மின்வாரிய லாரி மோதி ஒருவர் பலி
சங்கரன்கோவில் அருகே, மின்வாரிய லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல், திருநெல்வேலி செல்லும் சாலையில், வன்னிக்கோனேந்தல் அருகே சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில், சிவகுமார்(30) என்பவர் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்திற்கு சொந்தமான லாரி மோதியதில், சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தேவர்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.