சங்கரன்கோவில் அருகே ஆந்த்ரக்ஸ் நோயினால் காட்டு மாடு பரிதாபமாக இறந்தது

சங்கரன்கோவில் அருகே ஆந்த்ரக்ஸ் நோயினால் காட்டு மாடு பரிதாபமாக இறந்தது, உடற்கூறாய்வு செய்து வனத்துறையினர் புதைத்தனர்.

Update: 2021-08-25 11:45 GMT

சங்கரன்கோவில் அருகே ஆந்த்ரக்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு காட்டு மாடு ஒன்று இறந்தது, அதை உடற்கூறாய்வு செய்து வனத்துறையினர் புதைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சோமரத்தான் பீட் வனப்பகுதியில் காட்டு மாடு ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கால்நடை மருத்துவரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்ததில் ஐந்து வயது மதிக்கத்தக்கது எனவும் ஆந்த்ரக்ஸ் நோயினால் இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார். இதணைத் தொடர்ந்து ஜேசிபி இயந்தரம் மூலம் குழி தோண்டி அதே இடத்தில் புதைத்தனர்.

வாசுதேவநல்லூர் மற்றும் புளியங்குடி பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் மூலம் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளுக்கு தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதால் கட்டாயம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வனச்சரகர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News