களக்காட்டில் மண்வளம் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு
களக்காட்டில் மண்வளம் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;
தென்காசி மாவட்டம், களக்காடு கோவிலம்மாள்புரத்தில் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி அறிவுறுத்தலின் பேரில், மண்வளம் மேம்பாடு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் நெல்லை மாவட்ட இணை வேளாண்மை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் தலைமை வகித்தார். கோவிலம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் லதா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சியில் டிவிஎஸ் சீனிவாசன், சேவைகள் அறக்கட்டளை பிரம்மா அசோலா உயிர் காரணி பற்றி விரிவாக விளக்கினார். மண் பரிசோதனை மற்றும் மண்வளம் பற்றியும், மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்க செயலாளர் மகேஸ்வரன் இயற்கை இடுப்பொருள்கள் கொண்டு மண்வளத்தை பெருக்குவது பற்றி விளக்கினார்.
முன்னதாக அனைவரையும் துணை வேளாண்மை அலுவலர் காசி வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் அருணாச்சலம்,செல்வி.அஞ்சனாதேவி, மணிகண்ட பிரபு, அப்துல் ரவூப் உதவி தொழில்நுட்ப அலுவலர் திரிசூலம் ஆகியோர்கள் செய்திருந்தனர்.