குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு; தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2021-08-29 01:00 GMT

வீட்டினுள் புகுந்த பாம்பை பிடிக்கும் தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லக்கூடிய சாலையில்  குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை சரோஜா என்பவருக்கு சொந்தமான வீட்டினுள் ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.

வீட்டிற்குள் இருந்த பழைய கிரைண்டரில் அந்த பாம்பு புகுந்ததால், உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News