சங்கரன்கோவில் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை முயற்சி, அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.;
கொலை முயற்சி,அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, அரிவாளை காட்டி பொதுமக்களிடம் பணம் பறித்தல் போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐசரிபாலன் @ மூர்த்தி என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் பவுல் யேசுதாசன் அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதின் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் ஐசரிபாலன்@ மூர்த்தி என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 04.01.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.பவுல் யேசுதாசன் அவர்கள் சமர்பித்தார்.