சங்கரன்கோவில் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்து உள்ள மருதா கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி, முத்து மாரி தம்பதியின் மகன் நவீன்குமார் (15). நவீன் குமார் முத்துமாரியன் அம்மாவின் ஊரான ஊர் மேல் அழகியான் கிராமத்தில் தங்கி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு லீவுக்காக அவரது அம்மா அப்பாவுடன் மருதப்பபுரம் கிராமத்தில் இருந்து வருகிறான். இந்த சூழ்நிலையில் அம்மா முத்துமாரி அவரது அம்மாவின் ஊரான ஊர் மேல் அழகியான் சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் வீட்டில் தனியாக இருந்த நவீன் குமார் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
நவீன் குமார் இறந்த தகவலை உறவினர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவிலாங்குளம் காவல்துறையினர் நவீன் குமாரின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருதாப்பபுரம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.