தென்காசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: போலீசார் அதிரடி

தென்காசி அருகே சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-13 13:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகாபுரியில் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகன்(59), அய்யாதுரை(33), மாரிசாமி(36),கணேசன்(40), குருசாமி(42), ஐயப்பன்(56) மாரி(40) ஆகிய ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News