சங்கரன்கோவில் 2ம் கட்ட தேர்தல்: உபகரணங்கள் அனுப்பும் பணி தீவிரம்
சங்கரன்கோவிலில் 163 வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.;
நாளை உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெறுவதையொட்டி சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள 163வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இராண்டாவது கட்டமாக நாளை நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 163வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டி, சீல், மை, பேப்பர் பண்டல்கள், பிளாஸ்டிக் வாலி உட்பட பல்வேறு வகையான பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் சங்கரன்கோவில் வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்களிக்க தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் காவல்துறையினரின் பாதுகாப்போடு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் குருவிகுளம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட 180வாக்கு சாவடி மையத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.