சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்
சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.
சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம். காயமடைந்தவர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஆறுதல் கூறிய அதிமுக, திமுக வினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து பாம்பு கோவிலுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி பேருந்து ஆட்கொண்டார்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த பொன்னுச்சாமி(75) சண்முகத்தாய்(67) மல்லிகா(45) உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதி. பேருந்து விபத்துக்குள்ளானததை அறிந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் இரண்டு கட்சியினரும் காயம்பட்ட அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பேருந்து ஓட்டுநர் கருத்தப்பாண்டி என்பவர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. விபத்து குறித்து சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.