அமைச்சர் ஊருக்குள் வர பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2021-03-22 04:45 GMT

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜலெட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி (தனி)யில் அதிமுக வேட்பாளராக தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.,வும் அமைச்சருமான ராஜலெட்சுமி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 19-ம் தேதி முதல் குருவிகுளம் ஒன்றியப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்ததால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியதால், அதிமுக வை கண்டித்து பல்வேறு கிராமங்களில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் வல்லராமபுரம் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றார். அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிமுக விற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது கிராம மக்களுடன் அதிமுக வினர் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி வாக்குகள் சேகரிக்காமல் திரும்பிச் சென்றார்.

Tags:    

Similar News