குற்றாலத்தில் கோலாலமாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழா..!

The car festival was held at courtalam at Thirukutralanathar temple

Update: 2023-02-07 05:15 GMT

குற்றாலம் சித்திர சபை முன்பு அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் தைத் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமை வாய்ந்த திருக்குற்றாலநாத சுவாமி கோவில் உள்ளது. இதே கோயிலில் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபையும் அமைந்துள்ளது. இங்கு மூலிகளான மூலவர் மற்றும் பல்வேறு ஓவியங்கள் உள்ளது.

புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் இந்த சித்திர சபையைச் சுற்றியே நடைபெறும். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தைத் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இதே போன்று இந்த ஆண்டிற்கான தைத் தெப்பத் திருவிழா சித்திரசபை முன்பு அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.

முன்னதாக கோவிலில் இருந்து திருக்குற்றால் நாதசுவாமி, குழல்வாய்மொழி அம்மன், மற்றும் திருவிலஞ்சிகுமாரர், வள்ளி, தெய்வானையுடன் சித்திரசபைக்கு எழுந்தருளியதும், அங்கு சுவாமி அம்பாள், முருகர், தெய்வானை, வள்ளிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனைகள் நடத்தப்பட்டு, தெப்பக்குளத்தில் உள்ள தேருக்கு எழுந்தருளியதும், தெப்ப உற்சத் திருவிழா துவங்கியது. மின்னொளியால் ஜொலித்த தெப்பத்தேர் தெப்பக்குளத்தை 11 முறை சுற்றி வலம் வந்தது. பின்னர் சுவாமி அம்பாள், முருகர் தெய்வானை வள்ளி ஆகியோர் திருக்கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

திருக்குற்றாலநாத சுவாமி கோவில் தைத் தெப்ப உற்சவத் திருவிழாவில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News