சங்கரன்கோவில்-வேளாண் சட்டங்களை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம்
சங்கரன்கோவிலில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.;
இன்று தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது . தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போரட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்க்கும் விதமாக சட்டங்கள் பொருந்திய நகல்களை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மேலும் மத்திய அரசு அந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.