ஊரடங்கு - ஊட்டை விட்டு ஊருக்கு போணும்னா - இ-பதிவு கட்டாயம்.

Update: 2021-05-19 08:00 GMT

சங்கரன்கோவிலில் முழு ஊரடங்கை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் இ-பதிவின்றி வெளியே சுற்றிய 100 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா பரவலின் அதிதீவிரமடையும் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் வருவாய் துறை சார்பின் வட்டாட்சியர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் அனுமதியின்றி டீ காபி விற்பனை செய்த 20 க்கும் மேற்ப்பட்ட நபர்களிடமிருந்து டீ கேத்தல்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலை 10 மணிக்கு மேல் யாரும் தேவையின்றி வெளியே சுற்றி திரிய கூடாது என்றும் இ-பதிவின்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து தீவிரவாகன சோதனையில் ஈடுபட்ட அவர்கள் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் இ-பதிவின்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.


மேலும் விதிமுறைகளை மீறி எந்த ஆவணமும் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் ௧௦௦ க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் நகர் முழுவதும் அதிகம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

Tags:    

Similar News