முழு ஊரடங்கு -வெறிச்சோடிய சங்கரன்கோவில்.
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,காவல்துறை.;
சங்கரன்கோவிலில் முழு ஊரடங்கை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து முழு ஊரடங்கு தினமான இன்று நகரின் முக்கிய சாலைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது தேவை இன்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும் விதிமுறைகளை மீறி எந்த ஆவணமும் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர் இதனால் நகர் முழுவதும் அதிகம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.