சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலாளர் ரஞ்சன் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் சங்கரன்கோவிலில் பொது மக்களுக்கு மாஸ்க் அணிய அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.