சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய சாலை வழியாக சென்ற ஊர்வலம் பயணியர் விடுதி முன்பு முடிந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.