சங்கரன்கோவிலில் சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு சாலைப் பணியாளர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கரன்கோவில் நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் வட்டத் தலைவர் குருநாதன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.