மோட்டார்பைக்- பேருந்து மோதி விபத்து, 2 பேர் பலி

Update: 2021-03-03 04:45 GMT

சங்கரன்கோவில் அருகே மோட்டார்பைக்கும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலியானார்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மோட்டார்பைக்கில் திருமலாபுரம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் சூர்யா, மாரிராஜ் மகன் ராகுல் ஆகிய இருவரும் புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவர்கள் ரயில்வே கேட் அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து, இவர்கள் வந்த மோட்டார்பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News