சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தெப்ப திருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் ஆவுடை பொய்கை தெப்ப திருவிழா ஆண்டு தோறும் தை மாத கடைசி வெள்ளியன்று நடைபெறுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக தெப்ப உற்சவ நிகழ்ச்சி குளத்தில் நீர் இல்லாததால் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் குறைந்த அளவிலான நீர் இருந்த போதிலும் சில ஆன்மீக அமைப்புகள் ஒன்றிணைந்து அருகில் உள்ள கிணறுகளில் இருந்து மோட்டார் மூலமாக தெப்பத்தில் தண்ணீரை நிரப்பி தெப்ப திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து சுவாமி அம்மாள் கருட வாகனத்தில் ஊர்வலம் வந்த பின்னர் சிறப்பு அபிசேகம், தீபாராதனையும் நடைபெற்றது. தெப்ப குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து தொடர்ந்து 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.