சாலையில் மயங்கியவரை காப்பாற்றிய ஆய்வாளர்

Update: 2021-01-25 08:51 GMT

தென்காசி மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சாலையில் விழுந்து கிடந்த முதியவரை காவல் துறையினர் தங்களது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் சுமார் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தார். அவ்வழியே வந்த நகர காவல்ஆய்வாளர் மங்கையர்கரசி மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை தூக்கி தண்ணீர் கொடுத்து தனது வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதை தொடர்ந்து முதியவர் யார் என்று விசாரணை மேற்கொள்ளும் போது சேர்ந்தமரம் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பதும் தனது மகன்கள் தன்னை பராமரிக்காமல் தேனி பேருந்தில் ஏற்றி விட்டதாகவும் உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செல்லுமாறு பேருந்தில் இருந்து இறங்கி விட்டதாகவும் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட தூரம் நடந்ததால் மயங்கி கீழே விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார்.சாலையில் விழுந்து கிடந்த முதியவரை தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல்ஆய்வாளரை அனைவரும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News