சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாமை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாமை வள்ளிநாயகம் என்பவர் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இறந்தவர் உடலை கரிவலம் வந்தநல்லுார் காவல் துறையினர் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக செந்தட்டியாபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.