பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
பொட்டல் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்ட விவசாயிகள் கோரிக்கை.
பொட்டல் பகுதியில் முகம்மிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்ட விவசாயி கோரிக்கை
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது பொட்டல் கிராமம், இப்பகுதி விவசாயிகள் மலைஅடிவாரத்தில் நெல், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மலையடிவாரத்தில் யானைகள் முகாமிட்டு பொட்டல் பகுதியில் உள்ள தென்னை, வாழை மரங்களை புடுங்கியும், நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது.
இதனால் இப்பகுதியி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர், மேலும் அவர்கள் கூறுகையில் இப்பகுதியில் யானைகள் தொந்தரவு தொடர்ந்து வருகிறது இதுகுறித்து பலமுறை மனு கொடுத்து உள்ளோம் மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் பல முறை கூறி உள்ளோம் ஆனால் இதுவரை நேரில் வந்து பார்க்கவும் இல்லை மேலும் நஷ்டஈடும் கிடைக்கவில்லை, என்றால் கூட பரவாயில்லை இனிமேலாவது யானைகள் இப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.