பெண் தவற விட்ட மணி பர்சை விரைவாக கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்
நெல்லை மாவட்டத்தில் பெண் தவறவிட்ட மணி பர்சை போலீசார் உடனடியாக கண்டு பிடித்து அவரிடம் ஒப்படைத்தனர்.;
தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவன் பத்துகளம் பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் புளியரையில் உள்ள கடைக்கு வந்தபோது அவரது கையில் வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் தொலைந்து விட்டதாக புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் தலைமையில் தலைமை காவலர் திருமூர்த்தி, முதல் நிலை காவலர்கள் ராஜேந்திரன்,சுரேஷ்,சாகுல் ஹமீது ஆகியோர் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன மணி பர்ஸ் மற்றும் செல்போனை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
விரைவாக செயல்பட்டு தனது பணம் மற்றும் செல்போனை கண்டுபிடித்து கொடுத்த புளியரை காவல்துறையினருக்கு பகவதி தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.