செங்கோட்டை அருகே பெண் தலை துண்டித்து கொலை: போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சொத்துக்காக, பெண் தலை துண்டித்து கொலை. காவல்துறையினர் விசாரணை.;

Update: 2022-01-13 10:25 GMT

காெலையுண்ட பாப்பாம்மாள்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சொத்துக்காக, பெண் தலை துண்டித்து கொலை. காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர் காலமாகிவிட்ட நிலையில், இவரது மனைவி பாப்பா என்ற பாப்பாம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்த நிலையில் சுடலை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த போது பக்கத்து வீட்டிலுள்ள முருகன் என்பவரை துணைக்கு அழைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார். சுடலை காலமாகிவிடவே அவரது மனைவி பாப்பாம்மாள் மட்டுமே தனிமையில் இருந்து வந்துள்ளார்.

மேலும் முருகன் பாப்பாம்மாளிடம் அவர் வசிக்கும் வீட்டை தனக்கு எழுதி தருமாறு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முருகன் நேற்று பாப்பாம்மாளை கோடாறியால் தலையை மட்டும் துண்டாகா வெட்டி தூக்கி அவரது வீட்டின் அருகே போட்டு விட்டு புளியரை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாப்பாம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News