விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள். விரட்ட போராடி வரும் விவசாயிகள்.

Update: 2021-09-15 10:05 GMT

செங்கோட்டை அருகே உள்ள வடகரை கிராமமத்தில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரை கிராமம் ஆனது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்தப் பகுதிக்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 4 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. மேலும் ஊர்களை ஒட்டியுள்ள வாழைத்தோப்புக்குள் வாழை மரங்களை சேதம் செய்து விட்டுப் போயின.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வெடி வைத்து யானைகளை அங்கிருந்து விரட்டினர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடைபெறுவதால் விவசாய பயிர்கள் அழிவதாகவும், இதனால் பெரிய நஷ்டத்தில் விவசாயிகள் கஷ்டப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து யானைகள் ஊருக்குள் இறங்காத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News