தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம்
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளால் தென்னை, வாழை,பலா ,மா மரங்கள் சேதம்.
செங்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்த யானைகளால் தென்னை, வாழை,பலா ,மா மரங்கள் சேதம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டை அணை அருகே உள்ள சீனிமாமரத்தோட்டம் பகுதி உள்ளது. அதிகாலை தோட்டத்தித்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த சுமார் 20 தென்னை மரங்களை சேதப்படுத்தியும் வேறோடு சாய்த்தும், காய்த்திருந்த மா மரத்தின் கிளைகளை ஒடித்து மாங்கனிகளை தின்றும், பலா பழங்கள் முழுவதையும் சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வாழை மரங்களையும் பிடிங்கியுள்ளது. சுமார் 4 யானைகளுக்கு மேல் இந்த தோட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இதே கால கட்டத்தில் இந்த தோட்டப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தால் பயிர்கள் மரங்கள் சேதமடைவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அணைப்பகுதியிலும் அணைப்பகுதிக்கு மேலும் பல இடங்களில் யானைகள் தண்ணீர் அருந்தும் இடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் யானைக்கூட்டங்கள் தோட்டங்களுக்குள் வருவதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.