தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
கடையநல்லூரில் தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் சேக்குதுமான் தலைமை தாங்கினார். செய்யது முகைதீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை நல்லாசிரியர் ரசூல் அஹமத் இப்ரஹிம் தொகுத்து வழங்கினார்.
காஜா மைதீன் அனைவரையும் வரவேற்றார். செய்யது மசூது அறிமுக உரையாற்றினார். வரலாற்று நூல் ஆசிரியர் இப்ராஹிம், அரஃபா வஹாப், செய்யது இப்ராஹிம், மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தமிழ்நாடு அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் அல்லாபிச்சை, தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் நலசங்க கௌரவத் தலைவர் காதர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள் முகம்மதுஷா, இல்லியாஸ், பெனாசிர் சாகுல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொருளாளர் செய்யது சுலைமான் நன்றி உரையாற்றினார் நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.